நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வந்த அரசாங்கம் தற்போது அதனை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வந்த அரசாங்கம் தற்போது அதனை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க - Theevukaran News நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வந்த அரசாங்கம் தற்போது அதனை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வந்த அரசாங்கம் தற்போது அதனை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வந்த அரசாங்கம் தற்போது அதனை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க

Adjust the font size:     

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சமகி ஜன பலவேகய (SJB) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி., நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேவை என பொதுமக்கள் கூறினால் அதனை தொடர்ந்தும் தக்கவைக்க தயார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த போது ஜனாதிபதி முறைமையை கடுமையாக விமர்சித்ததுடன், தேர்தலின் போது அதனை இல்லாதொழிப்போம் என உறுதியளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த உறுதிமொழிகளை மீறி தேசிய மக்கள் சக்தி (NPP) தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பாதுகாக்கும் குழுவாக மாறியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post