யாழ் கிங்ஸ் இணை உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Adjust the font size:     

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியில் பங்குபற்றிய கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி நிர்ணயம் செய்ய செல்வாக்கு செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யாழ் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்ஜோத் கல்ரா உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post