நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் தீர்மானித்துள்ளது நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் தீர்மானித்துள்ளது - Theevukaran News நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் தீர்மானித்துள்ளது நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் தீர்மானித்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் தீர்மானித்துள்ளது

Adjust the font size:     

ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த வளாகம் குற்றச் சம்பவமாக கருதப்படுவதாகவும், அங்கு கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கைதிகள் தற்காலிகமாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். விசாரணை அதிகாரிகள் குற்றச் செயல்கள் நடந்த இடத்தில் பாதுகாப்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விசாரணைகள் முடிவடைந்ததன் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இயங்கிவரும் சிறைச்சாலைகளில் கைதிகளின் அடர்த்தி மற்றும் கைதிகளின் நலன் கருதி தற்போதுள்ள சிறைச்சாலைகளுக்கு மேலதிகமாக தற்காலிகமாக சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் நோக்கத்திற்காக 'மஹமோதர' மற்றும் 'பழைய போகம்பர' வளாகங்களை சிறைச்சாலைகளாக நிறுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post