கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்படி, குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் உருவான பதற்றமான சூழலை கட்டுப்படுத்த முற்பட்டபோதே இந்த நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமர்வின் போது, இராமநாதன் அர்ச்சுனா, அரச அதிகாரிகளின் நடத்தை மற்றும் கடமைகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததையடுத்து, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரச ஊழியர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க முயற்சித்த போதிலும், அவரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னர், உடல் ரீதியான மோதலாக முற்றியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்