வனவிலங்கு அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்று சேவையிலிருந்து விலகுகின்றனர் வனவிலங்கு அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்று சேவையிலிருந்து விலகுகின்றனர் - Theevukaran News வனவிலங்கு அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்று சேவையிலிருந்து விலகுகின்றனர் வனவிலங்கு அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்று சேவையிலிருந்து விலகுகின்றனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

வனவிலங்கு அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்று சேவையிலிருந்து விலகுகின்றனர்

Adjust the font size:     

சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் உள்வாங்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (13) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையாக செயற்பட்டு தற்போது கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றார் என அகில இலங்கை வனவிலங்கு காவற்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க பெரிஸ் தெரிவித்துள்ளார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post