விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் காத்தாடிகளை பறப்பதை தவிர்க்கவும் - விமானப்படை

Adjust the font size:     

தற்போது நடைபெற்று வரும் காத்தாடி பறக்கும் பருவத்துடன், தீவில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் காத்தாடிகள் பறக்கவிடப்படுவது அதிகரித்து, விமானங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஓடுபாதைகளுக்கு அருகில் காத்தாடிகளை பறக்கவிடுவது உலகளவில் விமான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும், இது விமானச் செயல்பாடுகளுக்கு நேரடித் தடையாக இருப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கட்டுநாயக்கா, இரத்மலானை, ஹிங்குராங்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய பிரதேசங்களிலுள்ள விமான ஓடுபாதைகளை சுற்றி பரந்து விரிந்த காத்தாடிகள் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக இன்று (15) புறப்பட்ட Y-12 ரக விமானம், காத்தாடி கம்பிகளால் பாரிய ஆபத்தை எதிர்கொண்டது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழிநுட்ப பரிசோதனையில் விமானத்தின் இடது சக்கரம், இடது இயந்திரப் பகுதி மற்றும் விமானத்தின் பல பாகங்களில் காத்தாடி சரங்கள் அதிகளவில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post