களுத்துறை மாவட்ட செயலகத்தின் தரைத்தளத்தில் இன்று (13) காலை திடீரென தீ பரவியுள்ளது.
அதன்படி, காலை 8.30 மணியளவில் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின் அமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ பரவியதாகவும், தீயினால் கணினி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
களுத்துறை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்