பாராளுமன்றம் இன்று (10) மீண்டும் கூடவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நிலையியற் கட்டளைகள் 22, பத்திகள் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஏழு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
அதனையடுத்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபையை ஒத்திவைக்குமாறு அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்