இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானத்தில் இருந்து மேல்-நடுத்தர வருமானத்திற்கு முன்னேறுகின்றன - உலக வங்கி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானத்தில் இருந்து மேல்-நடுத்தர வருமானத்திற்கு முன்னேறுகின்றன - உலக வங்கி - Theevukaran News இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானத்தில் இருந்து மேல்-நடுத்தர வருமானத்திற்கு முன்னேறுகின்றன - உலக வங்கி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானத்தில் இருந்து மேல்-நடுத்தர வருமானத்திற்கு முன்னேறுகின்றன - உலக வங்கி
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானத்தில் இருந்து மேல்-நடுத்தர வருமானத்திற்கு முன்னேறுகின்றன - உலக வங்கி

Adjust the font size:     

இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறைந்த நடுத்தர வருமானத்திலிருந்து மேல் நடுத்தர வருமானத்திற்கு மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு மேலதிகமாக ஜோர்டான், மைக்ரோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் நடுத்தர வருமான மட்டத்தை எட்டியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாடு வீழ்ச்சியடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்துறையின் மறுமலர்ச்சி மற்றும் நிதி மற்றும் சுற்றுலா சேவைத் துறைகளின் வளர்ச்சியின் காரணமாக நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 இல் 5% ஆக வளர்ந்தது என்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

மேற்குறிப்பிட்ட வருமான வகைப்பாடு வரம்பை இலங்கை மிகக் குறுகலாகத் தாண்டிய போதிலும், இந்த வகைப்பாடு நாட்டின் மீள்தன்மைக்கான அறிகுறியாகும் என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post