இன்று முதல் நாடளாவிய ரீதியில் 3 நாட்கள் கொசு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சுத்தமான இலங்கை’ வேலைத்திட்டத்தைப் போன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் நாட்டில் 55,406 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதே காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்