இலங்கையின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான ஹெலகுருவினால் அறிமுகப்படுத்தப்பட்ட HelaGo app Taxi சேவையின் காலி சாரதி சந்திப்பு இன்று (03) நடைபெறவுள்ளது.
இந்த HelaGo சாரதி சந்திப்பு காலி சமனல மைதானத்தில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
HelaGo டாக்ஸி சேவைக்கு பதிவு செய்ய விரும்பும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீட்டு சான்றிதழ் மற்றும் வருமான வரிக் கணக்கு ஆகியவற்றைக் கொண்டு வந்து பதிவு செய்யலாம்.
பயணிகளுக்கு தரமான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு சாரதிகளுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்சி நிகழ்ச்சி HelaGo உடன் இணைந்து இங்கு நடைபெறுவதும் விசேட அம்சமாகும்.
HelaGo லோக்கல் டாக்சி சேவையானது காலி மாவட்டத்தில் உள்ள பயணிகளுக்கு ஜூலை 7 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்