டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,000 ஆக அதிகரித்துள்ளது

Adjust the font size:     

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜூலை மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், 38,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,026 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post