இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் 1300 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்துவதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்