கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி கோத்தபய தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி கோத்தபய தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது - Theevukaran News கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி கோத்தபய தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி கோத்தபய தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி கோத்தபய தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

Adjust the font size:     

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இந்த மனு இன்று நான்காவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் பிரதிவாதிகள் சார்பில் மேலதிக வாதங்களை முன்வைத்ததையடுத்து, இந்த மனு மீதான மேலதிக வாதங்கள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post