கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான செயற்பாட்டு புள்ளிவிபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திய மொத்த பயணிகளின் எண்ணிக்கை 4,748,481 என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் முதல் 6 மாதங்களில் கையாண்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 30,659 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,573 எனவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளைப் பயன்படுத்திய போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கை 424,856 எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்