தம்புத்தேகம யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தம்புத்தேகம பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்