புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார் - Theevukaran News புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்

Adjust the font size:     

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அவர் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான நியமனக் கடிதம் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட ஜூலை 1ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post