பாராளுமன்றம் இன்று (25) மீண்டும் கூடவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நிலையியற் கட்டளைகள் 22, பத்திகள் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புப் போராட்டம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முற்பகல் 11.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணையை அடுத்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்