சரித் அபேசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் வழங்க முன்வருமாறு கோரியிருந்தால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருப்பார் என பகுஜன பலய அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி பியல் தர்ஷன குருகே தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சரித் அபேசிங்க மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், எனினும் கைது செய்ய ஆறு முதல் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது வீட்டை சுற்றி வளைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரித் அபேசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்லக்கூடியவர் அல்ல எனத் தெரிவித்த அவர், அவர் ஊடகவியலாளர் மாநாடுகளில் தவறாமல் தோன்றும் பொது நபர் எனவும் சுட்டிக்காட்டினார்.
நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இரண்டாம் தர தலைவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற பாரிய கேள்வியை இது எழுப்புவதாக சட்டத்தரணி பியல் தர்ஷன குருகே மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்