மக்கள் எதிர்பார்க்கும் எதுவும் தற்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (25) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டிற்கு நடக்க வேண்டிய அனைத்தும் ஏற்கனவே நடந்துவிட்டதாகவும், அதை “அச்சிந்தித்தம்பி பவதி, சிந்தித்தம்பி விநாசதி” என்ற சொற்றொடரால் சிறப்பாக விவரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியினரோ அல்லது பொதுமக்களோ கூறுகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்