யக்கல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 65 இ-சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த இ-சிகரெட்டுகளை இணையத்தில் விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்