பெட்ரோல் 92 மற்றும் டீசல் விலை குறைந்தது பெட்ரோல் 92 மற்றும் டீசல் விலை குறைந்தது - Theevukaran News பெட்ரோல் 92 மற்றும் டீசல் விலை குறைந்தது பெட்ரோல் 92 மற்றும் டீசல் விலை குறைந்தது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

பெட்ரோல் 92 மற்றும் டீசல் விலை குறைந்தது

Adjust the font size:     

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல வகையான எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 414 ரூபாவாகும்.

அத்துடன், லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 382 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், 95 ஒக்டேன் பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post