300 யூனிட்டுகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட மேற்கூரை சோலார் பேனல் அமைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் மின் கட்டத்தின் ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் வகையில் நாளை (27) முதல் 29 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அவற்றை அணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எரிசக்தி பிரதி அமைச்சர் இல்யாஸ் மஹம்மட் அர்கம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இந்த முறைமைகளை அணைப்பதன் மூலம் எதிர்வரும் பொசன் விடுமுறையின் போது அண்மையில் வெசாக் பண்டிகையின் போது ஏற்பட்ட மின்வெட்டு போன்ற அவசர மின்வெட்டு மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியும் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்