தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாகப் பரவிவரும் டெங்கு அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, குறுகிய காலத்தில் டெங்குவை ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்