நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 54,189 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
நாளாந்தம் 950 - 1000 நோயாளர்கள் பதிவாகும் எனவும், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்