அர்ஜுன மகேந்திரன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு அர்ஜுன மகேந்திரன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு - Theevukaran News அர்ஜுன மகேந்திரன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு அர்ஜுன மகேந்திரன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

அர்ஜுன மகேந்திரன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு

Adjust the font size:     

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதிவாதிகள் 11 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், இந்த வழக்கை விசாரிக்கும் மூவரடங்கிய பெஞ்ச் உரிய முறையில் அமைக்கப்படவில்லை என நீதிபதி திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் லிமிடெட், அதன் நிர்வாக சபை உறுப்பினர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கி மார்ச் 20 20 இல் நடத்திய பிணைமுறி ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post