ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இன்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, மாணவியின் திறமைகளை பாராட்டினார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொண்ட தனித்துவமான வெற்றிக்காக நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.
மேலும், மாணவி தருஷி கருணாரத்ன நாட்டிற்கு வந்ததன் பின்னர் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports
