மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு

Adjust the font size:     

 

Image - Adaderana

ஆறு மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு மட்டக்களப்பு நாவலடி குளத்தில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (08) நண்பகல் 12 மணியளவில் இந்த மாணவர்கள் மட்டக்களப்பு சீலாமுனை பகுதியிலிருந்து நாவலடி பகுதிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் 6 பேரும் மீண்டும் சீலாமுனைக்கு செல்வதற்காக கரைக்கு வந்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் பயணித்த மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்த மாணவர்கள் டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக படகில் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சிலாமணன் பகுதியில் வசிக்கும் 19 மற்றும் 18 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post