பேருந்து கட்டணம் அதிகரிக்க கோரிக்கை

Adjust the font size:     


டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் திரு.அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post