களு கங்கை - நில் கங்கை நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது

Adjust the font size:     

இரத்தினபுரி பிரதேசத்தில் களுகங்கையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறுகளின் அண்மைக்கால நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் இதனைக் குறிப்பிடுகிறது.

தற்போது இரத்தினபுரி மற்றும் அலகாவ நீர் மானிகளில் களு கங்கையின் நீர் மட்டம் கவனம் செலுத்த வேண்டிய மட்டம் வரை பதிவாகியுள்ளது.

இதன்படி, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் மில்லகந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

இதேவேளை, களுகங்கையின் புதுபவுல பிரதேசத்தில் சற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய அறிக்கையின்படி, நில்வலா ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post