திருகோணமலை தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையின் ஒளடத களஞ்சியசாலையில் இருந்த அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கு ஏற்பட்ட தீயினால் நாசமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார செயலாளர் சுமதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த கிடங்கில் இருந்த உயிர் காக்கும், அத்தியாவசிய மற்றும் பொது மருந்து பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார செயலாளர் தெரிவித்தார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island







