கோவிட் தொற்றுநோய்களின் போது கிழக்கு மாகாண ஆசிரியர்களிடமிருந்து அறவிடப்பட்ட ஒரு நாள் சம்பளத்தை மீள வழங்குவதற்கு சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உரிய சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொவிட் காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை குறைக்க தீர்மானித்ததன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
