கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட பாடசாலை மாணவன் MH. ஹஸ்னி அகமட்
2 தங்கப்பதக்கங்களையும், 1 வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அண்மையில் கந்தளாயில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளிலேயே இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
போட்டிகள்
1) 60M. ஓட்டம் - முதலாமிடம் - தங்கப்பதக்கம்.
2) 100M. ஓட்டம் - முதலாமிடம் - தங்கப்பதக்கம்.
3) 80M. தடைதாண்டல் ஓட்டம் - மூன்றாமிடம் - வெண்கலப் பதக்கம்.
மைதான வசதிகள் இல்லாவிட்டாலும் இச்சாதனையை நிலைநாட்ட இரவு பகலாக பேருழைப்பு வழங்கிய SA.சர்ராஜ் (விளையாட்டு பயிற்றுவிப்பாளர்), M.ஹய்யாஸ் (விளையாட்டு பயிற்றுவிப்பாளர்), வழிகாட்டியாக திகழும் உடற்கல்வி சிரேஷ்ட ஆசிரியர் MH.ஹாரூன், பிரதி அதிபர்,உதவி அதிபர் மற்றும் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் மாணவனின் பெற்றோர் (முஹம்மட் ஹாரிஸ், பர்வின் நிஸா)ஆகியோருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதில் அகமகிழ்கிறோம்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
