சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் கலையாற்றலையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பிஸ்மி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி ஒன்று 2023.10.01 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பிஸ்மி வளாகத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி நிறுவனத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கண்காட்சியில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை, பிஸ்மி ஆரம்பப் பாடசாலை, பிஸ்மி கின்டர்கார்டன் முன்பள்ளி, பிஸ்மி இடைநிலைப் பாடசாலை என்பவற்றில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் ஆக்கங்களே கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சித்திரங்கள், கைப்பணிகள், கண்டுபிடிப்புகள், அரபு எழுத்தணி ஆக்கங்கள் என மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் 300க்கும் அதிகமான காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆக்கங்கள் மாணவர்களின் சுய ஆக்கங்களாக அமைந்திருந்ததோடு சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டே அதிகமான ஆக்கங்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், பிஸ்மி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கண்காட்சியில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern



