அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சித்திரமாலித சில்வா தெரிவித்துள்ளார்.
50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் குழந்தை பருவ ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேசத்தில் விவசாயமே பிரதான வாழ்வாதாரமாக காணப்படுவதாகவும், முறையான அறுவடை இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
