ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) தொழில்நுட்ப பிரிவில் தொடர்ந்தும் 6 வது முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்ததுடன் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 08.09.2023ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் தொழில்நுட்பபீடக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவு பழைய மாணவர் அமைப்பான Tech Union (டெக் யூனியன்) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் கற்பித்த ஆசிரியர்களான எம்.எல்.நாஸர், எம்.எல்.இர்ஷாத் பாபு , ஸர்ஜுன் நிசா, எஸ்.ஷோபனா, ஆர்.என்.ஸுமைரா ஆகியோர் டெக் யூனியன் அமைப்பினால் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education







