ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வலய மட்டத்தில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு

Adjust the font size:     

 



அக்கரைப்பற்று வலயப்பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் வெவ்வேறாக கடந்த 01/09/2023 அன்று நடைபெற்றன.
 
இதில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம்-7 இரு மொழி ஊடக கற்கைப் பிரிவில் கல்வி பயிலும் N.ஹுமைதி மற்றும் MIS.அன்ஹா விதாத் ஆகிய இரு மாணவர்களும் ஆங்கில மொழி மூலமாக நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி நிகழ்வில் வலய மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
 
இம்மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 06/09/2023 அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபர் AH.பௌஸ் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இம்மாணவர்கள் மாகாண மட்டத்திலும் வெற்றிபெற்று சாதனை படைக்க நாமும் வாழ்த்துவோம்.

- NM.முஹமட் ஸாலிஹ்

 

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post