
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தேசிய ரீதியில் தாய் மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பு தர மதிப்பீடுகளில் மிகச் சிறப்பான செயல்திறனுக்கான அங்கீகார விருது மற்றும் நோயாளி பாதுகாப்பு கருதி தீவிர சிகிச்சை பிரிவு (ICU) க்கான சிறப்பு சான்றிதழையும் பெற்றுக் கொண்டது.
சுகாதார அமைச்சினால் உலக நோயாளி பாதுகாப்பு தினத்தையொட்டி (2023) "நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயாளிகளை ஈடுபடுத்துதல்" எனும் தொனிப்பொருளில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன தலைமையில் பண்டாரநாயகக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று சனிக்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், தர முகாமைத்துவ பிரிவின் பதில் பொறுப்பு வைத்தியர் டாக்டர். எம்.எச்.எம்.சனூபர் மற்றும் அனைத்து தரச் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern