![]() |
| Image - cnn.com |
இத்தாலியின் லம்பேடுசா தீவை 24 மணி நேரத்தில் 7000 குடியேற்றவாசிகள் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குடியேற்றவாசிகள் துனிசியாவிலிருந்து வந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அந்தத் தொகை லம்பேடுசா தீவின் மொத்த மக்கள்தொகையை விடச் சுமார் ஆயிரம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் குடியேற்றவாசிகளின் வருகையுடன், தீவின் மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது.
அதேநேரம், தீவுப்பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான இயல்புடன் அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
