இமயத்தை நோக்கி தன் சிறகை விரித்த காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் சிறிய சிட்டு

Adjust the font size:     

 


இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட சதுரங்க போட்டியில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவி MSF.ஆயிஷா வெற்றி வாகை சூடி தேசிய மட்டத்திற்கு தெரிவானார்.

ஒரு சின்னஞ்சிறு மழலை புத்திக்கூர்மையுடன் தொடர்பு பட்ட சதுரங்கப்போட்டியிலே இவ்வளவு தூரம் தன் திறமையை வெளிப்படுத்தியமையானது எமது பகுதியில் இதுவே முதற்தடவையாகும்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வரலாற்றையே மாற்றிய இவ்வெற்றியானது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் உலகளவில் புகழை ஈட்டித் தந்துள்ளது என கூறின் அது மிகையாகாது.
 
இம்மாணவியினை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 01/09/2023 அன்று காலை ஒன்று கூடலின் போது பாடசாலை சமூகத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக இடம் பெற்றது.
 
இந்த சிறு மழலையின் கனவை நனவாக்கி அவரின் திறமையினை உலகறியச் செய்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தாருக்கும் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷேக் UL.மன்சூர் சேர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார்.
 
NM.முஹமட் ஸாலிஹ்
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post