இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி பாராட்டியதோடு, அதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
அத்துடன், இலங்கை தொடர்பில் தென்கொரியா வழங்கிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் இலங்கை இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் தென்கொரியாவில் அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
