இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

Adjust the font size:     

 
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 
 
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்பதுடன், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post