நியூயார்க் செல்கிறார் ஜனாதிபதி

Adjust the font size:     

 

Image - Guim.co.uk

கியூபாவில் நடைபெற்ற "ஜி77 மற்றும் சீனா" நாடுகளின் தலைவர் உச்சி
மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில்
பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நியூயோர்க்
சென்றடைந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த
ஆண்டின் கருப்பொருள், "2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு,
முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சி
இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை
மீண்டும் உருவாக்குதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும்
உருவாக்குதல்" என்பதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அமர்வில் உரையாற்றி தனது விசேட உரையை
ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post