நாட்டின் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

Adjust the font size:     

 

Image - Rehman Abubakr

தற்போது பெய்து வரும் கனமழையால் களுகங்கையின் கிளை நதிகளான மகுரு கங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் கழிவு முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், அந்த ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஆறுகளின் நீர் மட்டம் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் அந்த பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனடுகம மற்றும் தலகஹகொட பிரதேசங்களில் இருந்து நில்வலா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

அங்கு நீர் மட்டம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post