அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவினால் தரம் 03,04 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வலயமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2023.09.09 மற்றும் 10ம் திகதிகளில் ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் S.அம்ஜத்கான் அவர்களின் தலைமையில் சிறுவர் விளையாட்டுப் போட்டி இணைப்பாளர் உதவிக் கல்விப் பணிப்பாளர் AL.பாயிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயத்தைச் சேர்ந்த 70க்கு மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் , அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் AM. றஹ்மத்துல்லா சேர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தரம் 4 மாணவர்களுக்கான ஆண் பெண் கலப்புப் பிரிவில் எமது பாடசாலை 1ம் இடத்தைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education



