சட்டத்துறையில் பட்டப்படிப்பினை நிறைவு செய்து Attorney Law பரீட்சையிலும் சித்தியெய்திய ஹிபாஸ் சுமையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அட்டாளைச்சேனை கோணாவத்தை மண்ணிலே அன்வர் ஹிபாஸ் மற்றும் சலீம் றுமைசா ஆகியோரின் புதல்வியான இவர் அட்டாளைச்சேனை அக்/அந் - நூர் மகா வித்தியாலாயத்தில் கல்வி கற்றார். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் சாதாரணதரப் பரீட்சையில் 6A, B, C, S என்ற பெறுபேற்றினையும் பெற்றார்.
உயர்தரத்தில் கலைத்துறையை தெரிவு செய்து அதே பாடசாலையில் கல்வியை தொடர்ந்த இவர் உயர்தரப் பரீட்சையில் 3A என்ற பெறுபேற்றினையும் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கற்கை நெறிக்கு தெரிவாகி அதனை பூர்த்தியும் செய்ததோடு தொடர்ந்து இலங்கை சட்டக்கல்லூரியில் Attorney Law கற்கையினையும் நிறைவு செய்தார். குறித்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டப்படிப்பினை நிறைவு செய்து இன்று (2023/09/06) அதற்கான பட்டத்தினையும் கொழும்பு BMICH இலே பெற்றுக்கொண்டார்.
மேலும் இலங்கை சட்டக்கல்லூரியினால் இறுதியாக நடாத்தப்பட்டு அண்மையில் வெளிவந்த Attorney Law பரீட்சையின் முடிவில் 55.88 என்ற சராசரியில் சித்தியடைந்தமையும் எமது அட்டாளைச்சேனை கோணாவத்தை மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern

