பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக புதிய வர்த்தமானி அறிவிப்பு

Adjust the font size:     

 

புதிய அத்தியாவசிய சேவைகளின் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு இந்தச் சேவைகள் அத்தியாவசியமானவை என்பதை கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளைப் பராமரித்தல் மற்றும் நோயாளிகளை வரவேற்றல் , பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகக் கருதப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் திருமதி சாந்தனி விஜேவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post