நிபா வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது, சமீபத்தில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவது குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரவிவரும் சில செய்திகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தது.
எவ்வாறாயினும், எந்தவொரு அபாய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸை கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ உலகளவில் தயாரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
