36 வருடங்கள் சுகாதாரத்துறையில் கடமையாற்றிய மருந்தாளர் றகுமான் அரச சேவையிலிருந்து ஓய்வு

Adjust the font size:     

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள பிராந்திய மருந்து விநியோகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக சுமார் 17 வருடங்கள் கடமையாற்றிய மருந்தாளர் ஐ.எல்.அப்துல் றகுமான் தனது 36 வருட கால அரச சேவை சுகாதாரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மருந்தாளர் றகுமானுடைய மகத்தான பணியை பாராட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா திங்கட்கிழமை (25) பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய மருந்தாளர் திருமதி தர்ஷினி இந்திரகுமார் ஆகியோர் மருந்தாளர் றகுமானின் கடந்தகால சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.


அதனைத் தொடர்ந்து பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் மருந்தாளர் றகுமானின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

- றியாஸ் ஆதம்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post