குவைத்தில் நீண்ட நாட்களாக வீசா இன்றி இலங்கைக்கு வர முடியாமல் தவித்த 31 இலங்கையர்கள் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் தற்காலிக விமான அனுமதி மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரும் இன்று காலை 6:16 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களில் 03 பேர் ஆண்கள் மற்றும் 28 பேர் பெண்கள்.
அதேநேரம், 9 ஆண்களும் 24 பெண்களும் உட்பட 33 இலங்கையர்கள் குவைத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் வீட்டு வேலைக்காகக் குவைத்துக்கு சென்று வீசா இன்றி தங்கியிருந்த 64 இலங்கையர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அனுராத்புரம், குருநாகல், காலி, மத்தள மற்றும் மொனலாகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
